இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறுமா ?

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெரும் அணி மட்டுமே வருகின்ற  ஜூலை 14 -ம் தேதி  லண்டனில் உள்ள  லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் லீக் போட்டியில் கடந்த ஜூன் 13- ம் தேதி மோத இருந்தது.

ஆனால் அன்று நடைபெற இருந்த போட்டியில் மழை பெய்ததால் போட்டி ரத்தானது.இந்த இரு அணிகளும் முதல் முறையாக நடப்பு உலகக்கோப்பையில் இன்று மோத உள்ளது.இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறுமா ? இந்திய அணி வெற்றி பெறுமா ? என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

author avatar
murugan