இரண்டாவது டெஸ்ட் போட்டி… வெற்றி பெற்றது இங்கிலாந்து… உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..

  • இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடந்து வந்தது.
  • இந்த, தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது  டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடந்தது.இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.பின் இரண்டாவதாக களமிறங்கிய  தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது  இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி  இரண்டாவது ஆட்டத்தில் 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இலக்காக 438 ரன்கள்  நிர்ணயிக்கப்பட்டது. பின்  களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமாக ஆடி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே  எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 5-வது நாள் மற்றும்  இறுதி ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை டிரா செய்ய கடுமையாக  விளையாடியது. இந்த அணி ரன்களைக் குவிப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியது. எனவே ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட  இந்த ஆட்டம் , கடைசி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால்,தென் ஆப்பிரிக்க அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இரண்டாவது டெஸ்டை வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. சமனில் முடிந்த இந்த  போட்டி கிரிகெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Kaliraj