ஏன் இந்த பாகுபாடு? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நடிகை குஷ்பூ!

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்

By leena | Published: Oct 22, 2019 10:41 AM

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின் திரைத்துறையினரிடம் கலந்துரையாடிய பிரதமர், தண்தியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து பிரதமர் மோடி திரைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான குஷ்பூ தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'பிரதமரை சந்தித்த அணைத்து இந்திய கலைகனர்களையும் மதிப்பதாகவும், அதே சமயம் ஹிந்தி சினிமா மட்டும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவில்லை என்பதை பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா பெரும் பங்கு வகிப்பதாகவும், அத்துடன் உலக அளவிற்கு தேசத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியிடம், ஏன் தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவில்லை? ஏன் இந்த பாகுபாடு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc