ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்..? கம்பீர் விளக்கம்..!

கடந்த 15-ம் தேதி காற்றுமாசு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் என 29 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் கூட்டத்தில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களில் கிழக்கு டெல்லியின் பா.ஜ.க எம்.பி.யும் , முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரும்  ஒருவர்.
கூட்டத்தில் கம்பீர் கலந்து கொள்ளாமல்  இந்தியா-பங்களாதேஷ்  அணிகளுக்கிடையில் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தார்.இந்த செயலால்  கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில் சுவரொட்டிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொள்ளாதற்கான காரணத்தை கம்பீர் கூறியுள்ளார். அதில் “காற்று மாசு குறித்த கூட்டம் முக்கியமானது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான்  கடந்த ஜனவரி மாதமே இந்த போட்டிக்கு வர்ணனை செய்வதற்காக ஒப்பந்தமாகி விட்டேன்.
நான் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலில் இணைந்தது ஏப்ரல் மாதத்தில் தான். ஒப்பந்தத்தை மீற முடியாது என்பதால்  கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என முன்பே கூறிவிட்டேன் ” என தெரிவித்தார்.

author avatar
murugan