மலேசியாவில் இருப்பவர்களை மீட்கும் போது மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம் .? – உயர்நீதிமன்றம்

மலேசியாவில் இருப்பவர்களை மீட்கும் போது மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம் .? – உயர்நீதிமன்றம்

மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்..? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடந்து மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் பல முயற்சிகளை செய்து வருகிறது.

மேலும், மத்திய அரசும் சிறப்பு ரயில்களை இயங்கி வருகிறது.  இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம்  சங்லி மாவட்டத்தில் குப்வாட் கிராமத்தில் உள்ள 400 தமிழர்களை மீட்க கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்..?  மேலும்  மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது. உடனடியாக அவர்களை அழைத்து வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube