யார் பொய் சொல்வது ? நீங்களே முடிவு செய்ங்க ..ராகுல் காந்தி பதில்

சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அந்த விருதிற்கு சரியானவர்

By venu | Published: Dec 28, 2019 12:07 PM

  • சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அந்த விருதிற்கு சரியானவர் ராகுல் காந்தி தான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 
  • யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி என்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், புதிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடிற்கு மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது  எல்லா நேரங்களிலும் பொய் பேசுவார்.இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அந்த விருதிற்கு சரியானவர் ராகுல் காந்தி தான் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில்,ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவரது கூறுகையில்,  இந்தியாவில் எங்கும்  முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தேன். ஆனால், அதே வீடியோவில்  முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இதனால் யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc