யார் சொல்லி பேசினார் ஓ.பி ரவீந்திரநாத்! அதிமுகவில் கிளம்பிய புதிய சர்ச்சை !

முத்தலாக் தடுப்பு மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்

By dinesh | Published: Jul 27, 2019 07:19 PM

முத்தலாக் தடுப்பு மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் குமார் தெரித்துள்ள கருத்து அதிமுக கட்சியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.   கடந்த 25 ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த முத்தலாக் தடுப்பு மசோதா வாக்கெடுப்பில் அதிமுக இதனை ஆதரிப்பதாக கூறி இருந்தார் ஓ.பி ரவீந்திரநாத். இந்த நிலையில், அதிமுக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதாக தமிழகத்தில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிமுக தலைமையில் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படவில்லை என்பது தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 1 தொகுதியில் மட்டும் வென்று இருக்கும் அதிமுக அரசு, வேலூர் தொகுதியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ள இந்த கருத்தால் வேலூர் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரியும் நிலை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. ஓ.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ள இந்த கருத்தால் அதிமுகவில் இரண்டு தலைமைகளின் இரண்டு கருத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc