கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி.! கேள்வி எழுப்பும் உலக சுகாதார அமைப்பு.!

ரஷ்யா கண்டுபித்த கொரோனா தடுப்பூசி பற்றிய கடுமையான பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய தரவுகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஸ்யாவில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து விட்டது.

இது குறித்து, ரஷ்யநாட்டு பிரதமர் புடின் தெரிவிக்கையில், தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், 2 மதங்களுக்குள் மனித சோதனை நிறைவு பெற்றதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டு ஆராய்ச்சியாளர்களால் இது சாத்தியப்பட்டது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார்.

இறுதி கட்ட பரிசோதனையில் 1000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என ரஷ்ய பிரதமர் தெரிவித்தார். இதனை ரஷ்ய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, தடுப்பூசி பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய தரவுகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.