இந்தியன் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா….?

இந்தியன் படம் ஷங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் உருவான படமாகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக கமலஹாசன் இந்தியன் தாத்தா வேடம் போட்டு பார்த்துள்ளார். இந்த வேடம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்தின் வில்லனாக நடிப்பதற்கு சூர்யா, அஜித், விஜய் சேதுபதி இவர்களில் யாரை தேர்வு செய்ய உள்ளீர்கள் என கேட்டதற்கு விஜய் சேதுபதி என கூறியுள்ளார். எனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment