பிக் பாஸ் சீசன்-4 தொகுப்பாளர் யார்? ஒளிபரப்பாகும் சேனல் எது தெரியுமா?

தமிழில் நடத்தப்படும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

By Fahad | Published: Apr 02 2020 12:12 PM

தமிழில் நடத்தப்படும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 3 சீசன்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ளது. இந்த மூன்று சீசன்களிலும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுப்பாளராக இருந்துள்ளார். 3 சீசன்களும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாகியது.

இந்நிலையில், அடுத்ததாக விரைவில் பிக் பாஸ் சீசன் 4 வெளிவர உள்ளது. இந்த நிகழ்ச்சி கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட மாட்டாது என்றும், விஜய் டிவியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபடாது என்றும் பேசப்பட்டது. ஆனால், இதற்கு பதிலளித்த விஜய் டிவி நிர்வாகம்: பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளோம். அதில் தற்போதும்  கமல்ஹாசன் தான் தொகுப்பாளராக பேச உள்ளார். அதே போல அது எங்களுடைய விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாகும் என்றும் கூறியுள்ளனர். 

More News From bigboss 4