நடிகை அமலாபாலின் காதலர் யார் தெரியுமா? தனது காதலர் குறித்து மனம் திறந்த நடிகை அமலாபால்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ஆடை திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவர் அரை நிர்வாணமாக நடித்துள்ளதால், இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பல தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை அமலாப்பால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது காதலர் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ஆடை படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்று முதலில் தனது காதலரிடம் தான் கேட்டாராம். அதற்க்கு அவரது காதலர், இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினாராம்.

மேலும் அமலாபால் கூறுகையில், தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என நினைத்திருந்தேன். ஆனாலும்  என்னாலும் தர முடியும் என அவரது காதலர் நிரூபித்து விட்டதாக கூறியுள்ளார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான் என்றும், அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அவரது காதலர் யார் என்றும், அவர்களுக்கு திருமணம் எப்போது என்பது குறித்த எந்த தகவலையும் நடிகை அமலாபால் தெரிவிக்கவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.