கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைவில்லை ! – உலக சுகாதார துறை தலைவர் டெட்ரோஸ் அதானோம்

கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைவில்லை என்று  உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் 3,065,778 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 211,658 உயிரிழந்துள்ளனர். இதில் 923,054 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று கூறியுள்ளார். கொரோனாவில் உலக நாடுகள் அனைத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைவரும் தனிநபர் இடைவெளி மற்றும் முகச்கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளார். நாம் அனைவரும் ஒற்றுமையாக இல்லை என்றால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

author avatar
Vidhusan