நாம் இப்போது அபாயகரமான கட்டத்தில்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலக நாடுகளில் கொரோனா தற்போது மிக அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பானது  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொலைக்கார கொடூரக் கொரோனா பாதிப்பிற்கு உலக நாடுகள் எல்லாம்  கடும் உயிர்சேதத்தையும் பொருளாதார பெரும் இழப்பையும் கொடுத்து வருகின்றது.மேலும் இதனுடைய பரவல் ஆனது அசுர வேகத்தில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம்  எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த எச்சரிக்கையில் அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு  நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக  இருந்து வருகிறது. மேலும் உலக மக்களாகிய நாம் தற்போது புதியதும் மேலும் அபாயகரமானதுமான  ஒரு கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் மிக அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. எனவே  முக கவசம் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதும், கை கழுவுதலும் தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

மேலும்  இவ்வைரஸ் தாக்குதல் தொடர்பாக அனைத்து உலக நாடுகளும் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். உயிர்களை குடித்து வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான உள்ளது. என்று டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

author avatar
kavitha