T20 போட்டியில் முதல் முறையாக வைட் வாஷ் செய்த – விராட் கோலி !

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது.

பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் அடித்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில்  இந்திய அணி  விளையாடிய 3 போட்டிலும் வெற்றி பெற்று உள்ளது.இதன் மூலம்  கேப்டன்  விராட் கோலி தலைமையில் முதல் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று உள்ளது.

இதனால் விராட்கோலி முதல் முறையாக வைட் வாஷ் செய்து  உள்ளார். இதற்கு முன் ரோஹித்  இலங்கை மற்றும் வெஸ்ட இண்டீஸ் ஆகிய  அணிகளுடன் தலா ஒரு  முறையும்  , தோனி ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு முறையும்  வைட் வாஷ்  செய்து  இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan