ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள்-மு.க.ஸ்டாலின்

வேலூரில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற 5 ஆம் தேதி வாக்குப்பதிவு

By venu | Published: Aug 03, 2019 02:17 PM

வேலூரில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்காக திமுக சார்ப்பில் அக்கட்சின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.வேலூர் சத்துவாச்சாரியில் இன்று பேசுகையில்,வேலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் கருணாநிதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருப்பவர்கள் நாங்கள். தேர்தலில் ஓட்டு கேட்டதோடு மட்டுமல்லாமல்,வெற்றி விழாவிலும் கலந்து கொள்வேன்.நெடுஞ்சாலை துறையில் ஊழல் அதிகரித்திருக்கிறது என்று பேசினார்.  இதனையடுத்து மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc