நித்தியானந்தா எங்கே ? கர்நாடக நீதிமன்றம் கேள்வி

நித்தியானந்தா எங்கே ? கர்நாடக நீதிமன்றம் கேள்வி

  • தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.
  • நித்தியானந்தா எங்கே என்று கர்நாடக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக  அறிவித்தார் நித்தியானந்தா.இவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் தேடி வருகின்றனர்.குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.

இந்த வேளையில் தான்   நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது. ஆனால் இவரது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.நித்தியானந்தா விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவகாரமாக மாறியிருக்கும்  நிலையில்  அவரது முன்னாள் சீடர் சார்பில்  லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம்,வருகின்ற 12-ஆம் தேதிக்குள் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை  தெரிவிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Join our channel google news Youtube