நீ வரும் போது நான் மறைவேனா.! சுட்டியாய் நடனமாடும் ஸ்ரேயா.!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். 

By ragi | Published: May 11, 2020 06:39 PM

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.  அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2t018ல் ஆண்ட்ரி கோஷீவ் என்ற ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். 

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலர் ஜாலியான வீடியோக்களையும், த்ரோபேக் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும், சமையல் செய்யும் வீடியோவையும், குறும்பு வீடியோவையும் வெளியிடும் ஸ்ரேயா தற்போது நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த மழை திரைப் படத்திலுள்ள 'நீ வரும்போது' பாடலுக்கு பார்சிலோனாவில் மழையில் குழந்தையை போன்று சிரித்து கொண்டே நடன மாடியுள்ளார். அதனுடன் நான் செல்வதெல்லாம் காதலுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Step2: Place in ads Display sections

unicc