தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பெற்றோர்களிடம் கருது கேட்கப்பட்டும் என்றும், பாடங்களை குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.