டி.என்.பி.எல். போட்டிகள் எப்போது? விளக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர்!

5-ம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதம்

By surya | Published: Aug 01, 2020 12:12 PM

5-ம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஐபிஎல் தொடரை போல, தமிழகத்தில் உள்ள மாவட்டத்திற்கிடையே நடைபெறும் தொடர், டி.என்.பி.எல். இந்த தொடரில் உள்ள போட்டிகளில் நன்றாக விளையாடும் நபர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.

அந்தவகையில், இந்தாண்டு ஜூன் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 5-ம் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள 5-ம் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், நவம்பர் மாதம் அல்லது 2021 மார்ச் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார். மேலும், டி.என்.பி.எல். தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc