எப்பொழுது இந்த அரசு செயல்படப்போகிறது ? மு.க.ஸ்டாலின் அறிக்கை !

எப்பொழுது இந்த அரசு செயல்படப்போகிறது ? மு.க.ஸ்டாலின் அறிக்கை !

இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் உள்ளது.எப்பொழுது இந்த அரசு செயல்படப்போகிறது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 8-ஆம் தேதியன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6009 பேர் என்றால் , ஜூன் 8-ஆம் தேதியன்று எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்திருக்கிறது.ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 27,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஊரடங்கு காலத்தில்தான் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இவ்வளவு கேவலமாக ஊரடங்கை அமல்படுத்திய மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும்.முழு ஊரடங்கு-ஊரடங்கு – தளர்வு என்று ஊரடங்கு சட்டத்தையே தரம் தாழ்த்தி, கொச்சைப்படுத்தியது தமிழக அரசு. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கி இருந்தால்,இப்படி கேலிக் கூத்தான ஊரடங்கு தளர்வுகள் செய்திருக்க வேண்டாமே !

இறப்பு விகிதம் குறைவு என்று திரும்பத் திரும்பச் சொல்லி,தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் முதலமைச்சர்.தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 349 பேர்.இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடம்.இதில் சென்னையில் மட்டுமே பலியானோர் 280பேர்.இது பெரிய எண்ணிக்கை இல்லையா ?

அதுவும் 400-க்கும் மேற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டதாகவும் அதனை சிறப்புக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்யப்போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுகாதாரத்துறை சொல்லும் கணக்கும்,சென்னை மாநகராட்சி சொல்லும் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது.இரண்டுமே அரசின் துறைகள் தானே ? தனியார் மருத்துவமனையில் உயிரிழப்புகள் குறித்து கணக்கிடுவது பெரிய வேலையாக இருக்கிறது என்று சுகாதாரதுரைச் செயலாளர் பதில் அளித்துள்ளார்.அப்படி என்றால்,அரசு துறைகளுக்கிடையேயும்,சிறப்புக் குழுக்களிடையும் ஒருங்கிணைப்பு இல்லை என்று தானே பொருள்?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டெண்டர்களை இருந்து செய்வதிலும்,தமக்கு அவசியம் எனக்கருதும் கோப்புகளை நகர்த்துவதிலும்.மத்திய பாஜகவை மகிழ்விப்பதிலும்,செலவிடும் நேரத்தின் ஒரு சிறு பகுதியையாவது,கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்குச் செலவிடக் கருணையுடன் முன்வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.  

Join our channel google news Youtube