மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் paytm ..!

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் paytm ..!

 மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் Paytm  இணைக்கப்பட்டது.

மக்கள் எளிதாக பணபரிவர்த்தனை செய்து கொள்ள  போன் பே, மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான paytm ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக குற்றம்சாட்டபட்ட நிலையில், கூகிளின் கொள்கைகளை மீறியதால், Paytm, பிளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

ஆனால், Paytm For Business, Paytm Money, Paytm Mall பிற செயலிகள் அனைத்தும் Play Store இல் இன்னும் உள்ளன. ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Paytm பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இனி  Paytm செயலியை அப்டேட் செய்யவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியாது என தகவல்கள் வெளியானது.

இந்தியாவில் Paytm செயலியை மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், Paytm நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், மீண்டும் வந்துவிட்டோம் என  கூறியுள்ளது. இதனால், Paytm மீண்டும் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டது.

author avatar
murugan
Join our channel google news Youtube