இந்த மேடையில் ஆடும்போது சிறுவயதில் இவரின் பாடலுக்கு ஆடியதெல்லாம் நினைவுக்கு வருகிறது – சாண்டி.!

ராகவா லாரன்ஸ் ஆடுவதை போன்று சமமாக நடனமாடும் சாண்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி. ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை மட்டுமில்லாமல் அவரின் மகள் லாலாவும் ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார்.

வழக்கமாக புகைப்படங்களையும், நடன வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் சாண்டி தற்போது ஸ்கிரீனில் ராகவா லாரன்ஸ் அவர்களின் நடனம் நிறைந்த வீடியோ ஓட, அதே போன்று சாண்டி அவர்களும் மேடையில் சமமாக நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் இந்த மேடையில் ஆடும்போது சிறு வயதில் இவரின் பாடலுக்கு ஆடியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது சாண்டியின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.