பட்டாசு எப்போது வெடிக்கலாம்? நேரத்தை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில் தீபாவளியன்று  பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று   தமிழக

By venu | Published: Oct 23, 2019 01:04 PM

தமிழகத்தில் தீபாவளியன்று  பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று   தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர்.பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு  ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவித்தது.அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தது. இந்த நிலையில்  தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc