இனி வாட்சாப் ஸ்டேட்டஸ் நடுவே விளம்பரம்! புதிய வியாபார யுக்தியை களமிறக்கும் பேஸ்புக் நிறுவனம்!

வாட்சாப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் வாங்கிய பிறகு,வாட்சப் நிறுவனத்தில்

By manikandan | Published: Jan 06, 2020 04:55 PM

  • வாட்சாப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் வாங்கிய பிறகு,வாட்சப் நிறுவனத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • வாட்சப் நிறுவனத்தை பயன்படுத்தும் போது இடையே விளம்பரங்கள் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன் செயலி வாட்சப். இந்நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு வாட்ஸாப்பில் புது புது அப்டேட் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே பீட்டா வாட்சாப் பயணர்களுக்கு, டார்க் மூடு, பேஸ் லாக் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கையில், வாட்ஸாப் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது அதற்கிடையில், விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். அந்த விளம்பரத்தில் நிறுவனத்தின் கூறப்படும் விளம்பரம் மட்டுமே தெரியுமே தவிர அந்த விளம்பரத்தை யார் கொடுத்தார்கள் என்கிற விவரம் தெரியாது. அந்த விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாம் பார்க்கும் ஸ்டேட்டஸ் நடுவே விளம்பரம் குறுக்கிட உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc