நமது தகவல்களை திருடும் வாட்ஸ்ஆப் ப்ளஸ்…!!!

நமது தகவல்களை திருடும் வாட்ஸ்ஆப் ப்ளஸ்…!!!

 

வாட்ஸ்ஆப் ப்ளஸ் எனப்படும் ஒரு போலியான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவலை திருடுவதற்கு சாத்தியமான திறனை கொண்டுள்ளது.

இந்த வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஆனது ஸ்பேம் கமெண்ட்ஸ் மூலம் பரவுகிறது. அந்த ஸ்பேம் கமண்ட்ஸ் ஆனது, வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஏபிகே-வை டவுன்லோட் செய்ய வழிவகுக்கின்றன. இந்த “வாட்ஸ்ஆப் ப்ளஸ்” ஆனது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி செயலியான “வாட்ஸ்ஆப் ரிஸ்க்வேர்” அப்ளிகேஷனின் மற்றொரு மாறுபாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போலி ஆப் ஆனது, வாட்ஸ்ஆப்பின் அதிகாரப்பூர்வ (பச்சை நிற) லோகோவை, ஒரு தங்க நிறத்தில் கொண்டுள்ளது. டேட்டாவை திருடும் இந்த போலி வாட்ஸ் ஆப் ஆனது லாஸ்ட் சீன், ப்ளூ டிப்ஸ் மறைப்பு, டைப்பிங் வாசகம் ஆகியவற்றை மறைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போலியான ஆப் வழியாக. பிளே செய்யப்பட்ட வாய்ஸ் கிளிப்பை மறைக்கலாம் மற்றும் உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பார்த்த விவரத்தை விட மெனு வழியாக மறைக்கலாம். கிடைக்கப்பெற்றுள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த போலி பயன்பாட்டை அபு என்று அழைக்கப்படும் ஒரு நபர் உருவாக்கியுள்ளார்.

இந்த இணையத்தளம் அரபு மொழியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரே நேரத்தில் 100 போட்டோக்களை பகிர்தல், ப்ரைவஸி செட்டிங்ஸ்-க்கான இரகசிய பாஸ்வேர்ட் உட்பட பல நம்பமுடியாத அம்சங்களை கொண்டுள்ள இந்த வாட்ஸ்ஆப் முழுக்க முழுக்க போலியான ஒரு ஆப் ஆகும்.

பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் ஏபிகே-வில் காணபப்டும் com.gb.atnfas என்கிற குறியீட்டை கொண்டுள்ளது. இந்த போலி ஆப் ஆனது எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னும் துல்லியமாக டீகோட் செய்யவில்லை என்றாலும் கூட, இது உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் மற்றும் பலவற்றை திருடுகிறது என்பது மட்டும் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

லைஃப்ஹேக்கர் வழியாக வெளியாகியுள்ள இந்த டேட்டா திருட்டு அறிக்கையின் படி, “சாட்வாட்ச் ஆப் ஆனது முதலில் ஐஓஎஸ் தளத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் கண்டறியப்பட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. தற்போது சாட்வாட்ச் ஆப், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கிடைக்கிறது. லைஃப்ஹேக்கர் அறிக்கையில் வெளியான மற்றொரு மோசமான தகவல் என்னவென்றால், சாட்வாட்ச் ஆப்பின், வெப் வெர்ஷனை உருவாக்கும் முனைப்பில் டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம்.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *