வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (WhatsApp Payment):க்யூஆர்(QR) குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்..!!

வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (WhatsApp Payment):க்யூஆர்(QR) குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்..!!

வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம் சோதனை பகுதியை (வாட்ஸ்ஆப் பீட்டா) வந்து அடைந்துள்ளது.ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ஒரு புதிய மேம்படுத்தல் காணப்பட்டுள்ளது.  ஒரு வாட்ஸ்ஆப் பயனரை, க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேனிங் செய்வதின் வழியாக பண பரிமாற்றத்தை நிகழ்த்த அனுமதிக்கிறது. . இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (WhatsApp Payment) சேவையின் வழித்தடத்தின் வழியாக தான் கிடைக்கும் என்பதும், இந்த புதிய அம்சமானது, சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.18.93-ல் மட்டுமே அணுக கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரின் படி, இந்த வாட்ஸ்ஆப் பீட்டா அப்டேட் ஆனது நேற்று தான் வெளியிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய வாட்ஸ்ஆப்பில், செட்டிங்ஸ் -> பேமெண்ட்ஸ் -> நியூ பேமண்ட் விருப்பத்தில் உள்நுழைய, அங்கு இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். ஒன்று யூபிஐ ஐடி, மற்றொன்று ஸ்கேன் க்யூஆர் கோட். அதில் இரண்டாவது விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் அதாவது க்யூஆர் குறியீட்டை ஸ்கேனிங் செய்யும் விருப்பம். பின்னர் ஸ்கேனிங்கை நிகழ்த்த, யூபிஐ பின் (UPI PIN) சரிபார்ப்பு நிகழ்த்தப்படும். அதனை தொடர்ந்து தொகை சார்ந்த விவரங்களை உள்ளிடும்படி கேட்கப்படும். பின்னர் பணபரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்ளவேண்டியது தான்.இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.