#Breaking : வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படங்கள் அனுப்ப முடியாமல் பயனாளர்கள் தவிப்பு!

  • பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலி வாட்சாப். 
  • தற்போது அதில் வீடியோ மற்றும் போட்டோக்கள் அனுப்ப முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர். 

உலகில் பல கோடிக்கணக்கான பயணர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் தகவல் பரிமாற்ற செயலி வாட்டசாப். இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது. அதன் பிறகு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வந்தது. புதிய எதிர்கால அப்டேட்களையும் அறிவித்து வந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாட்ஸாப்  மூலம் போட்டோ, வீடியோ தகவல்களை அனுப்ப இயலவில்லை. இதற்கான காரணம் தெரியாமல் வாட்சாப் பயனர்கள் திணறி வருகின்றனர்.

இது குறித்த காரணத்தை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக #whatsappdown என்கிற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.