வாட்ஸ் அப்பின் அடுத்த அதிரடி.! இந்திய அரசு அனுமதி.! இனிமே கவலையே இல்லை.!

உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்

By balakaliyamoorthy | Published: Feb 09, 2020 06:47 PM

  • உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட். இந்த நிலையில் வாட்ஸ்அப் பே சேவையை இந்தியா முழுவதும் வழங்குவதற்கு நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதியை வழங்கியுள்ளது. 
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என, அறிமுகமாவதற்கு முன்னரே வாட்ஸ் அப் பே பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப் பே சேவையை இந்தியா முழுவதும் வழங்குவதற்கு நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பேமண்ட் சேவையை அந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முடியும் என கருதப்படுகிறது. இதனிடையில் கடந்த 2018-ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் பயனர்களுடன் இந்த சேவையை வெற்றிகரமாக சோதனை செய்தது. [caption id="attachment_258284" align="aligncenter" width="1200"] வாட்ஸ் அப் பே[/caption] ஆனால், டேட்டாக்களை சேமிப்பது தொடர்பான சிக்கல் மற்றும் விதிமுறைகள் போன்றவை வாட்ஸ்அப் பே அறிமுகத்தை இந்தியாவில் தள்ளி போக செய்தது. எனினும் அரசு அனுமதி கிடைக்காததால் இந்த சேவையை வாட்ஸ்அப் இதுவரை வழங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது சிக்கல்களை தீர்த்து வாட்ஸ் அப் பே சேவையை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த சேவை யு.பி.ஐ. மூலம் மொபைலில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வழி செய்யும். மேலும் இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்படும் போது, நாட்டின் மிகப்பெரும் மொபைல் பேமண்ட் சேவைகளில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc