என் தளபதி எது பண்ணுனாலும் அழகு! என் தளபதியே அழகு தான்!

ஒரு குட்டி கதை பாடல் குறித்து திவ்ய தர்சினியின் ட்வீட்டர் பதிவு.  இயக்குனர்

By Fahad | Published: Apr 01 2020 01:34 PM

ஒரு குட்டி கதை பாடல் குறித்து திவ்ய தர்சினியின் ட்வீட்டர் பதிவு.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்ய தர்சினி தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'என் தளபதி எது பண்ணுனாலும் அழகு, என் தளபதியே அழகு தான்.' என பதிவிட்டுள்ளார்.