செந்தில்பாலாஜி பாணியில் திமுகவில் இணையும் தங்கதமிழ்செல்வன்?தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாம்

செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது . குறிப்பாக  திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர்.  தங்கதமிழ்செல்வன் திமுகவில் இன்று இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டுள்ளனர்.
அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகினார் .செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார்.
திமுகவில் இணையும் போது செந்தில் பாலாஜி கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தினார்.இந்த நிலையில்  கரூரில் செந்தில்பாலாஜி பாணியில், தேனியில் தங்கதமிழ்செல்வன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.