வரி என்றால் என்ன?

வரி என்பது, அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது

By leena | Published: Jun 27, 2019 02:20 PM

வரி என்பது, அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபரிடம் இருந்தோ பெறும் நிதி அறவீடு தான் வரி என்று அழைக்கிறோம். வரியை நாம் மறைமுக வரி மற்றும் நேரடி வரி என இரண்டு வகையாக பிரிக்கலாம். முற்காலத்தில், வரியை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்காலத்தில் நாம் வரியை பணமாக தான் செலுத்தி வருகிறோம். வரியை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நிதி அமைச்சகங்கள் கீழ் செயல்படும் அமைப்புகள் இந்த வரியை வசூலிக்கின்றனர். வரியை நாம் செலுத்தாத பட்சத்தில், சட்டத்தின் படி அபராதம், சிறை போன்ற தணடனைகளும் வழங்கப்படுகிறது. இந்த வரியானது சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, காலால், மானியம், அரசு உதவி வரி , மதிப்பு கூட்டு வரி என பல பெயர்களால் வரி வசூலிக்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc