என்ன செய்கிறீர்கள்? என்னை தொடாதீர்கள்! நான் தற்போது ஒரு பிரபலம்!

ராணு மோண்டல் என்பவர் ரயில்வே மேடையிலிருந்து இந்தி பாடல் ஒன்றினை பாடினார்.

By leena | Published: Nov 08, 2019 02:42 PM

ராணு மோண்டல் என்பவர் ரயில்வே மேடையிலிருந்து இந்தி பாடல் ஒன்றினை பாடினார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இவர் ஒரே நாளில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் இசையமைப்பாளர் ஒருவருக்கு 3 இந்தி பாடல்களைப்பாடினார். இதன் மூலம் இவர் மேலும் பிரபலமானார். இந்நிலையில், இவர் மும்பையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அச்சமயம் அவர் திரும்பி இருந்ததால், அவர் கையை தொட்டு செல்பி எடுக்க அழைத்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த ராணு, 'என்ன செய்கிறீர்கள். என்னை தொடாதீர்கள். நான் தற்போது ஒரு பிரபலம். என்னிடம் வந்து என்ன செகிறீர்கள்.' என கேட்டுள்ளார். ராணு மோண்டலின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், சமூக வலைதளவாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc