முத்தலாக் சட்ட மசோதா_வின் மூன்று திருத்தங்கள் என்னென்ன…!!

முத்தலாக் சட்ட மசோதா முக்கிய திருத்தங்களுடன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
முஸ்லீம் மக்களின் விவாகரத்து விஷயத்தின் முத்தலாக் முறை சட்டவிரோதம் என கடந்த ஆண்டு அறிவித்தது உச்ச நீதிமன்றம் அறிவித்தது.இதனால் உடனடி முத்தலாக் செய்து மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் முத்தலாக்_கின் புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது.  மக்களவையில் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்து புதிய  முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. இந்த முத்தலாக் சட்ட மசோதா-வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்காததால் உடனடி இந்த முத்தலாக் சட்ட மசோதா விவகாரத்தை கிடப்பில் போட்டது.
இந்நிலையில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த  முத்தலாக் சட்ட மசோதாவில் மூன்று புதிய திருத்தங்கள் செய்து மீண்டும் முத்தலாக் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முடிவெடுத்தது மத்திய அரசு.இந்த முத்தலாக் சட்ட மசோதாவில் முதலாவது திருத்தமாக உடனடி முத்தலாக்கில் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் கைது செய்யப்பட்டாலும் இவர் ஜாமீன் பெற்று வெளியே வர முடியும். முத்தலாக்கினால் விவகாரத்தாகி பெண் பாதிக்கப்பட்ட சூழலில் அந்த பெண் மற்றும் அவரது ரத்த உறவுகள் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்று இரண்டாவது திருத்தம் செய்துள்ளது.அதே போல முத்தலாக் விவாகரத்தில்   கணவன், மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டுக்கு  அதிகாரம் வழங்குகிறது என்று மூன்று திருத்தம் செய்து இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment