கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை!

கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த, கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவமனையின் அலட்சியமே இத்தகைய பாதிப்புகளுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.