பிக்பாஸ் அபிராமி எடுத்த அதிரடியான முடிவு!

நடிகை அபிராமி கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது  சீசன்

By leena | Published: Apr 12, 2020 09:00 AM

நடிகை அபிராமி கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது  சீசன் நிகழ்ச்சியில்  கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இவர் தல அஜித் நடிப்பில் வெளியான, நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் எப்போதுமே சமூக வலைதள பக்கத்தில், மிகவும் ஆக்டிவாக இருப்பர். இதனையடுத்து, அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், 'நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். ஏனென்றால் இங்கு எனக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் வராது. இங்கிருந்தும் விரைவில் வெளியேறிவிடுவேன். டுவிட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சினை தருகின்றன.' என தெரிவித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc