43 வயதிலும் என்ன அழகு .? விமானத்தில் இருந்து புகைபடத்தை வெளியிட்ட மீனா.!

  • சிவா அவர்கள் ரஜினியின் 168-வது  படத்தை இயக்க உள்ளார்.
  • இப்படத்தில் நடிகை மீனா ரஜினியின் 168-வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஹைதராபாத் சென்று உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த  நடிப்பில் , இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “தர்பார்”இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வர உள்ளது.

இந்நிலையில் சிறுத்தை , வீரம்  , விஸ்வாசம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சிவா அவர்கள் ரஜினியின் 168-வது  படத்தை இயக்க உள்ளார்.இப்படத்தில் 20 வருடங்களுக்கு முன்  ரஜினியுடன் முத்து , வீரா , எஜமான் போன்ற வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை மீனா தற்போது 168-வது படத்தில் இணைந்து உள்ளார்.

2008 -ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில்  மீனா கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். இப்படத்தில் மீனா மட்டுமின்றி குஷ்புவும் நடிக்க உள்ளார்.இந்நிலையில் நடிகை மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைபடத்தை வெளியிட்டு அதில் தலைவர் 168-வது படத்திற்காக ஹைதராபாத் செல்வதாக கூறி விமானத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் என்ன அழகு .? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

author avatar
murugan