கால்வாய் அருகே கரை ஓதுங்கிய திமிங்கல சிலை..!

பெல்ஜியம் நாட்டில் உள்ள ப்ரசல்ஸ் என்ற நகரில் இன்று நுயிட் பிளாஞ்ச் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சிலை செதுக்கும் கலைஞர்கள் சிலர் அங்குள்ள தேவாலயங்கள், நினைவு சதுக்கங்கள், பள்ளி விளையாட்டு அரங்குகளில் 20க்கு மேற்பட்ட சமகாலத்தை சேர்ந்த சிலைகளை வடிவமைத்து உள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள ஒரு கால்வாய் அருகே, திமிங்கலம் ஒன்று காயங்களுடன் கரையொதுங்கி கிடப்பது போன்ற சிலையை கலைஞர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த சிலை, நிஜ திமிங்கலத்தை போல் தத்துருபமாக இருந்ததால், இதனை பார்த்த மக்கள் பலரும் திமிங்கலம் தான் கரை ஒடிங்கியதோ என நினைத்தனர். அதன்பின்னரே அது சிலை என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.