அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ்! ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு !

அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ்! ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு !

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதி வருகிறது . இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது  வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்க  இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  நிதானமாக விளையாடி வந்த எவின் லூயிஸ் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடித்து 58 ரன்னில்  அவுட் ஆனார்.பிறகு களமிறங்கிய  ஷிம்ரான் ஹெட்மியர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 39 ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் பிறகு களமிங்கிய நிக்கோலஸ் பூரன் 58 ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுடன் வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில்  தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டை பறித்தார்.312 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.  

Latest Posts

#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!
1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!