2-வது டெஸ்ட் போட்டி : டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சு

2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு

By venu | Published: Aug 30, 2019 07:44 PM

2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறுகிது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட்  கோலி (கேப்டன்), ராகுல், அகர்வால்,புஜாரா,ரகானே,விகாரி,பண்ட்,ஜடேஜா,இஷாந்த் சர்மா,முகமது சமி ,பூம்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்),ப்ராத் வெய்ட்,கம்பெல்,ப்ரூக்ஸ்,டேரன்பிராவோ,ஹெட்மயர்,ஹாமில்டன்,கர்னல்,சேஸ்,ரோச்,கப்ரியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc