சரி என்று பட்டதை தான் செய்தேன் ! ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்தது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்

தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

By venu | Published: Oct 12, 2019 08:27 AM

தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது.அதன்படி போர் விமானம், விஜயதசமி  அன்று  இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்திற்கு பூஜை செய்தார்.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,  தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் .எதிர்காலத்திலும் தனக்கு சரி என்று பட்டதைதான் செய்வேன். பூஜை செய்தது தங்களுடைய நம்பிக்கை .எனவே எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்பதே, குழந்தைப் பருவம் முதல் தனது நம்பிக்கை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc