தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!

சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர். 

சமீபத்தில் சுந்தர்.சி கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த “மாயா பஜார்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்பட்டது.இதனை சுந்தர்.சி தயாரிக்க அவரது உதவியாளரான பத்ரி இயக்கவுள்ளார்.

மேலும் பிரசன்னா,யோகி பாபு,ஷாம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு “நாங்க ரொம்ப பிஸி”என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர் .அதனை சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது