ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறேன் -சீமான்

ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று  சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் .அவரது பதிவில், ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.