கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம்- பன்னீர்செல்வம்

டெல்லியில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், வறுமை ஒழிப்பு, வறட்சி, விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.நீர் சேமிப்பை நாடு தழுவிய இயக்கமாக அறிவிக்க கோரிக்கை வைத்தோம்.
காவிரி – கோதாவரி இணைப்புக்கான நிதியை, இந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.