"சிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" - தமிழக அமைச்சர்கள் பேட்டி !

சிலை கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர்

By Fahad | Published: Apr 06 2020 01:58 AM

சிலை கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். தமிழக கோவில்களில் சிலை கடத்தல் காணமால் போன குற்றங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சிலைகள் கடத்தல் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.   இந்நிலையில். பொன்.மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்க படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனால், தங்களது குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினார்.

Related Posts