கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம் - சிவகார்த்திகேயன்

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'.

By leena | Published: Mar 13, 2020 12:07 PM

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இந்த படத்தில், ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், 'இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். 

தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். ரம்யா நம்பீசன் படம் பண்ணுகிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் இயக்கிய குறும்படம் பார்த்தேன். அது அதிகமான தாக்கத்தைக் கொடுத்தது.  கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். 

 

Step2: Place in ads Display sections

unicc