மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் - தோல்வி குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்

By venu | Published: Oct 24, 2019 07:45 PM

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி! மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்! கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc