மத்திய அரசுடன் ஒத்துழைக்கிறோம்.! மாநில நலனில் சமரசம் கிடையாது – கேரள முதல்வர் உறுதி.!

முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு, மத்திய அரசுடன் ஒத்துழைக்கிறோம், அதற்காக மாநில நலன்களில் சமரசம் கிடையாது.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மத்திய அரசுடன் முழு மனதுடன் ஒத்துழைப்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகார சமநிலையற்ற தன்மை பல சவால்களை உண்டாக்குகிறது. இதனால் அரசமைப்பு மூலம் மத்திய அரசுடனான அதிகார சமநிலையில் உள்ள சவால்களை தீர்க்க முயற்சிக்கிறோம் என கூறியுள்ளார். 

மத்திய அரசுடன் முரண்படுவது தங்கள் வழி அல்ல என்றும்  ஒக்கி புயல், பெரும்வெள்ளம், நிபா வைரஸ் பாதிப்புகளில் கேரளா ஒன்று சேர்ந்து போராடி மீண்டிருக்கிறது. மத்திய அரசுடனான சமமான அதிகாரம் இல்லாதது சவால்களை உருவாக்குகிறது. முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு, மத்திய அரசுடன் ஒத்துழைக்கிறோம், அதற்காக மாநில நலன்களில் சமரசம் கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். நிபா முதல் கொரோனா வரை கேரளா சாதித்த பெருமை கேரளா மக்களையே சேரும் என்றும் கடினமான நேரங்களில் கேரள சகாக்கள் காட்டும் உறுதியும், ஒற்றுமையுமே கேரளாவின் வெற்றி மந்திரம் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்