கேரள வெள்ளம் !நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

Rahul Gandhi addresses people living in relief camps in Kerala

கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி. தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.கேரள மாநிலத்தில்  கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும்  மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று கேரளாவிற்கு சென்றார்.அங்கு தனது மக்களவை தொகுதியான வயநாட்டிற்கு சென்றார். அங்கிருக்கும்  வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி,மேலும் மழை வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்டார் ராகுல் காந்தி.

Rahul Gandhi said he met people living in relief camps in Kerala. The South West monsoon is currently raining and Kerala is experiencing heavy rains. Wayanad district has been badly damaged. Rescue operations are underway. Rahul Gandhi went to Kerala today to visit his Lok Sabha constituency, Wayanad. Rahul Gandhi visited the flood relief camps and visited the affected areas.