வீடியோ: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து விராட் கோலியை குதித்து கொண்டாட வைத்த ஜஸ்பிர்ட் பும்ரா!!

  • கடைசி விக்கெட்டிற்கு களம் இறங்கி கடைசி பந்தில் யாரும் எதிர்பாராத வகையில் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்ஜஸ்பிர்ட் பும்ரா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க முதலே அபாரமாக ஆடியது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 95 ரன்களும், ஷிகர் தவான் 143 ரன்களும் விளாசினார்.

அதற்குப் பிறகு வந்த ரிஷப் பண்ட் 36 ரன்களும், விஜய் சங்கர் 26 ரன்களும்எடுக்க இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 358 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்

இந்த கடைசி பந்தில் சிக்சர் அடித்தார் பும்ரா. இதனை பார்த்த கேப்டன் விராட் கோலி அறையில் இருந்து  எழுந்து குதித்து கொண்டாடினார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

author avatar
Srimahath

Leave a Comment