கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டாரா ஜெனிலியா.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டாரா ஜெனிலியா.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா . ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதனையடுத்து இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும், தளபதி விஜய்யுடன் சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இவருடைய நடிப்பில் களங்கமில்லாத குழந்தைதனம் மற்றும் குறும்புத்தனத்தால் அதிக ரசிகர்களை பெற்றார். அதன் பின்னர், 2012ல் பிரபல பாலிவுட் நடிகரான ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் கொண்டார். அதனையடுத்து தனது இரண்டு குழந்தைகளை பார்த்து கொண்டு செட்டிலாகி விட்டார் .

இந்த நிலையில் தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கடந்த 3 வாரத்திற்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி, அதனையடுத்து 21 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், தற்போது கடவுளின் அருளால் கொரோனா தொற்றுக்கான ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போர் தனக்கு மிகவும் எளிதாக இருந்ததாகவும், அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த 21 நாட்கள் தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், டிஜிட்டல் தளம் தான் தனது தனிமையை மாற்றியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கொரோனாவிலிருந்து மீண்டு மீண்டும் தனது குடும்பத்தினருடனும், அன்புக்குரியவர்களுடனும் இணைந்ததில் மகிழ்ச்சி என்றும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்றும், சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 
 
View this post on Instagram
 

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

Latest Posts

#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று
உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் - கமலா ஹரிஸ்